புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


புங்குடுதீவு ஸ்ரீ கணேசா மகா வித்தியாலயத்தில் தமிழ் பாட ஆசிரியரான சசிக்குமார் தன்னிடம் கல்வி பயிலும் மாணவி ஒருவரைக் கர்ப்பவதியாக்கியுள்ளார்.தமிழ்ப் பாட ஆசிரியரின் இந்தக் காம வெறித்தனத்தால் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு 3 மாதக் கரு வயிற்றில் வளர்ந்துள்ளது.


இதன் காரணமாக இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுத வேண்டிய மேற்படி மாணவி அதனையும் இழந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. அத்துடன் மேற்படி ஆசிரியருக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்கள் பாடசாலைக்கு ஆசிரியர்களை நம்பி அனுப்பி வைத்தால் அங்கும் காமக் கொடூரம் அரங்கேற்றப்படுகின்றது.

இந் நிலையில் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாக அமைந்திருப்பதுடன், அவர்களின் அறிவும் கல்வியும் மழுங்கடிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை தோற்றுவிக்கப்படும்.

வீதியில் சென்றால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாடசாலைக்குச் சென்றால் அங்கும் பிரச்சினைகள் என்றால் எதிர்கால பெண்ணினத்தின் நிலை கேள்விக் குறியாகவே அமைந்து விடும்.

எனவே இவ்வாறு தவறுகள் செய்;பவர்களுக்குச் சட்டம் சரியான பாடம் புகட்டுவதுடன், அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விபரங்களை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்துவதும் தற்கால சூழ்நிலையில் முக்கியமானதாக அமைகின்றது.

இவ்வாறு செயற்படுத்தும் பட்சத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான குற்றச் செயல்கள் குறைவடைவதற்குக் சந்தர்ப்பங்கள் உண்டு.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top