கிளிநொச்சி திருநகர் வீதியில் உள்ள தனியார் வியாபாரம் நிலையம் ஒன்றில் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.யாழ். அரியாலையை சொந்த
இடமாக கொண்ட இ.இரவீந்திரன் (வயது 49) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளதாக விசாணைகள் மூலம் தெரியவருகிறது.
திருமணம் செய்து குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் திருநகர் வீதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த வியாபார நிலையத்தினர் நெருங்கிய உறவினர் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்வுக்கு சென்று மறு நாள் காலை வியாபார நிலையத்திற்கு திரும்பிய போது குறித்த நபர் தூக்கி தொங்கிய நிலையில் இறந்து காணப்பட்டுள்ளார்.
இவரது மரணம் தெடர்பாக பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக