புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்கம்பிட்டி வீதியில் கைகாட்டி சந்தியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் மாணவியொருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் முத்து முஹம்மட் ஜஹான் (வயது 21) என்ற மாணவியே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக குறித்த மாணவியின் தந்தை மற்றும் மாமா ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்காக சடலம் அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top