தரையில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கும் அக்னி 1 ஏவுகணை வெற்றிகரமாக இன்று பரிசோதிக்கப்பட்டது. ஒடிசா கடற்பகுதியில் உள்ள வீலர் தீவின் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9 .25 மணிக்கு இந்த பரிசோதனை நடைபெற்றது. 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை 12 டன் எடையும், 15 மீட்டர் நீளமும் கொண்டது.
1000 கிலோ ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் வடிவமைத்து உள்ளது. இந்த ஏவுகணை கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி அதே இடத்தில பரிசோதிக்கப்பட்டது. ஏற்கனவே இராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்த ஏவுகணை வீரர்களுக்கு பயிற்சி பெறுவதற்காக பயன்படுத்த ப்பட்டு வருகிறது...
அணுகுண்டுகளை தாங்கி சென்று எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அக்னி 1 ஏவுகணை இன்று ஒடிஷா கடற்கரையில் மீண்டும் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்டு தரை இலக்குகளை தாக்கி அழிக்கும் அக்னி வரிசை ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி சோதனை செய்து வருகிறது.
அக்னிகள் ஏவுகணை பல முறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ராணுவத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அதன் தயார் நிலை குறித்து அவ்வப்போது ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் டிஆர்டிஒ விஞ்ஞானிகள் முன்னிலையில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் அணுகுண்டுகளை தாங்கி செல்லும் சக்தி படைத்த அக்னி 1 ஏவுகணை இன்று ஒடிஷா கடற்பகுதியில் உள்ள வீலர் தீவில் உள்ள ஏவுகணை பரிசோதனை மையத்தில் மீண்டும் சோதித்து பார்க்கப்பட்டது. சோதனை வெற்றி பெற்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக