புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன்  செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர எரிகற்களைச் சோதனையிட்டதில் அவற்றில் உள்ள
பாக்டீரியாக்காளுடன் பூமியில் வாழும் மனித பாக்டீரியா அணுக்களுக்குத் தொடர்பு இருப்பதை நாசா விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூப்பர் கண்டுபிடித்துள்ளார்.

பூமியில் எப்படி மனித வாழ்க்கை தொடங்கியது என்பதை நட்சத்திர சரிகல் ஆதாரத்துடன் கிடைத்துள்ள பூமியின் அண்டை மண்டல அந்நிய மனித வாழ்க்கை முறை விபரித்துவிடும் என்று ஹூப்பர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“அண்டார்டிகா சைபீரியா அலஸ்கா ஆகிய இடங்களில் கிடைத்த நட்சத்திர எரிகற்கள் வித்தியாசமானவை. இந்த நட்சத்திர கற்களில் பலவற்றை முன்பு நான் பார்த்ததில்லை. இங்கு கிடைத்த நட்சத்திர எரி கற்களில் ஒன்பதுதான் பூமியில் உள்ளது.

பூமிக்குள் மட்டும் மனித வாழ்க்கை அடங்கிவிடவில்லை. பூமிக்ககு வெளியேயும் மனித வாழ்க்கை தொடர்கிறது என்பதை இவை காட்டுகின்றன. இவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்று பல விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இவற்றுக்கு எல்லாம் மேலாக பூமியில் வாழும் மனித இனத்துடன் நட்சத்திர எரி கற்களில் கண்டறிந்த பாக்டீரியாக்கள் தொடர்புடையவை என்பதுதான்.

நைட்ரஜன் இல்லாத இடத்தில் எப்படி பாக்டீரியாக்கள் உயிர் வாழ்ந்திருக்க முடியும் என்ற சந்தேகம் எழலாம். இதுதொடர்பாக பல விஞ்ஞானிகளிடம் கருத்துக் கேட்டேன். ஆனால் அவர்களால் இதற்கு விளக்கம் அளிக்க முடியவில்லை” இவ்வாறு ஹூப்பர் தெரிவித்துள்ளார் .இவரது இந்த ஆராய்ச்சி அண்டத்தின் அமைப்பு பற்றிய விஞ்ஞான பத்திரிகையில் வெளியாகியுள்ளது. இதுபற்றி மறுஆய்வு மேற்கொள்ள உலக அளவிலிருந்து ஐயாயிரம் விஞ்ஞானிகள் அழைக்கப்பட்டுள்ளனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top