புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இத்தாலியில் சுற்றுலா கப்பல் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் உயிர் தப்பிய மேலும் 15 பேர் இன்று சென்னை, திருச்சிக்கு வந்தனர். இத்தாலியில் இருந்து ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா சென்ற காஸ்டோ கன்கார்டியா சொகுசு கப்பலில் 3,350 பயணிகள் பயணம் செய்தனர். கப்பலில் இந்தியாவை சேர்ந்த
கேட்டரிங் நபர்கள் (சமையல் கலைஞர்கள்) 32 பேர் உள்பட 700 பேர் பணியில் இருந்தனர். கடந்த 13ம் தேதி இத்தாலியில் இருந்து இரவு 7 மணியளவில் கப்பல் புறப்பட்டது. ரோம் நகரை ஒட்டிய ஜிகாலோ தீவு அருகே இரவு 9.30 மணியளவில் சென்ற போது பாறையில் மோதி கப்பல் விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் இறந்தனர். மற்றவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் 8 பேர் நேற்று சென்னை திரும்பினர்.

இந்நிலையில் இன்று காலை 8.30 மணி விமானத்தில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ரபேக்கா, சிம்ராய், யூர்சிலியா மற்றும் சுந்தரபாண்டியன் (நெல்லை), ஞானசேகர பிரபு (ராமநாதபுரம்), கருப்பண்ணன் (மதுரை), வெற்றிவேல் (ராஜபாளையம்), மணிகண்டன் (திண்டுக்கல்) ஆகிய 8 பேர் சென்னை வந்தனர். இவர்களை உறவினர்கள் கட்டித் தழுவி, கண்ணீர் மல்க வரவேற்றனர். இன்று இரவு சென்னைக்கு வரும் விமானத்தில், 6 பேரும் நாளை காலை வரும் விமானத்தில் 3 பேரும் வருகின்றனர். இதற்கிடையில், பொன்னமராவதியை சேர்ந்த ராஜாகுமார் (35), துறையூர் ராஜா (25), கொடுமுடி கார்த்திகேயன் (29), சேலம் கிருஷ்ணன் (27), அறந்தாங்கி முத்துகுமார் (31), சிவகாசி செல்வகுமார் (25), நெய்வேலி ராஜ்குமார் (21) ஆகிய 7 பேர் இன்று அதிகாலை இத்தாலியில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தனர். அவர்களை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top