புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நோர்வேயில் இளம் தமிழ்ப் பெண் ஒருவர் தன்னையும் தன் குழந்தையையும் தீ வைத்து எரித்துள்ளார். இச் சம்பவமானது கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. கரலின் நேசராஜா என்னும் இப் பெண் தனது ஒன்றரை வயதுக் குழந்தையுடன் தன்னை
எரியூட்டியுள்ளார்.அவர் வீட்டில் ஏற்பட்ட தீயை அவதானித்த பொலிசார் உடனடியாக விரைந்து சென்று அவரைக் காப்பாற்ற உலங்குவானூர்தியின் உதவியை நாடியுள்ளனர். பரா மெடிக்ஸ் என்று அழைக்கப்படும் அவசர உலங்கு வானூர்தி மருத்துவச் சேவை மூலம் இவரும் இவரது குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும் எரிகாயங்கள் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக நோர்வே பொலிசார் தெரிவித்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது.

இறந்த கரலின் நேசராஜா ஒரு இலங்கையர் என்றும் அவர் அகதி அந்தஸ்த்தைக் கோரியிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இவர் ஏன் தற்கொலைசெய்துகொண்டார் என்ற காரணம் தெரியவில்லை எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக அறியப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top