மேற்குவங்கத்தில், எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் அனாதையாக கிடந்த பை ஒன்றில் ரூ. 23 லட்சம் நோட்டுகட்டுகளை, கண்டெடுத்த பெண் துப்புரவு தொழிலாளி அதை நேர்மையுடன் போலீசாரிடம் ஒப்படைத்தார். மேற்குவங்க மாநிலம் மால்டா ரயில்நிலையத்திற்கு உ.பி. கவுர்
எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. பயணிகள் அனைவரும் இறங்கியுடன் வழக்கம் போல் ஏ.சி.பெட்டிகளை துப்புரவு தொழிலாளிகள் சுத்தம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் அந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 அடுக்கு முதல் வகுப்பு ஏ.சி.பெட்டியினை வழக்கம் போல சுத்தம் செய்ய சென்ற சீமாராய், 50 என்ற பெண் துப்புரவு தொழிலாளி, ஏ.சி. பெட்டியினுள் ‘பேக்’ ஒன்று அனாதையாக கிடப்பதை பார்த்துள்ளார். யாரேனும் ஒரு பயணி, பேக்கினை மறந்து எடுக்காமல் சென்றிருக்கலாம் என கருதி, அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் ஒருவரிடம் தகவல் தர, போலீசார் விரைந்து வந்து பேக்கினை பிரித்து பார்த்த போது கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதில் ரூ. 1000 நோட்டுகள் மற்றும் ரூ.500 நோட்டுகள் என ரூ.23 லட்சம் இருந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் , ரயிலில் வந்த பயணி மறந்து போய் விட்டு சென்றாரா? அல்லது உ.பி.தேர்தல் நடப்பதால் கெடுபிடி காரணமாக பணம் கொண்டு செல்லமுடியாமல் திரும்ப வந்ததா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். பணத்தை பார்த்தும் அதை உடனே தகவல் தெரிவித்த பெண் துப்புரவு தொழிலாளியின் நேர்மையினை போலீசார் பாராட்டினர். அந்த பெண்ணின் நேர்மைக்கு விருது வழங்க பரிந்துரைப்படும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக