சீனாவை சேர்ந்த எழுத்தாளர் மைக்கேல் ஜோகன் என்பவர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தார். கிளாஸ்கோ நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலையத்தை சுற்றி பார்த்து அங்குள்ள காட்சிகளை வீடியோ படம் பிடித்தார்.ஆலயத்தில் உள்ள கண்ணாடி ஓன்றில் இளவரசி டயானா உருவம் தெரிவது போல பதிவாகி இருந்தது. அவர் முதலில் வீடியோ படம் எடுக்கும்
போது உருவம் கண்ணாடியில் தெரியவில்லை.
ஆனால் வீடியோ படத்தை திருப்பி போட்டு பார்த்த போது தான் அந்த உருவம் தெரிந்தது. இது டயானாவின் ஆவி படம் என்று அவர் கூறுகிறார். இந்த படத்தை யார் வேண்டுமானாலும் ஆய்வுக்கு எடுத்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.தற்போது கண்ணாடியை பார்க்கும் போது சாதாரணமாகவே தெரிகிறது. வீடியோவில் மட்டும் டயானா படம் தெரிந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக