புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தெற்கு அதிவேக மார்க்கத்தில் நாளை முதல் இரண்டு மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.இதன் பிரகாரம் எல்பிட்டிய நகரிலிருந்து காலை 06h00 மணிக்கும், 07h00 மணிக்கும் இந்த புதிய பஸ்கள் சேவையை ஆரம்பிக்கவுள்ளன.பின்னர் மாலை 16h40க்கும், 18h00 மணிக்கும் மஹரகமவிலிருந்து மீண்டும் எல்பிட்டியவிற்கு இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளன. பயணிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கவனத்திற்கொண்டே புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் எம்.டீ பந்துசேன குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு அதிவேக வீதியில் தற்போது நான்கு பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மஹரகமவிலிருந்து காலிக்கும், காலியில் இருந்து மஹரகமவிற்கு மணித்தியாலத்திற்கு ஒரு பஸ் வீதம் பயணிப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கூறியுள்ளார்.
ஆயினும், பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் இந்தச் சேவையினைப் பயன்படுத்துவதால், போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் ஆலோசனைக்கு அமைய, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் 40 நிமிடங்களுக்கு ஒருமுறை காலி - மஹரகம இடையே பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் எம்.டீ பந்துசேன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top