புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சீனாவில் பெண் குழந்தை ஆசையில், பெற்ற மகனின் பிறப்புறுப்பை வெட்டிய இளம்பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ளது யான்செங் நகரம். இங்கு வசிப்பவர் ஜியோ மெங். வயது 23. இவருக்கு பெண் குழந்தை மீது அளவுகடந்த
ஆசை. ஆனால்,
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜியோவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதில் வேதனை அடைந்தார். குழந்தைக்கு யயா என்று பெயர் வைத்தனர். இந்நிலையில், பெண் குழந்தை பிறக்கவில்லையே என்ற கோபத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மகனின் பிறப்புறுப்பை வெட்டி உள்ளார்.

குழந்தையின் அலறல் கேட்டு கணவன் ஸான், மாமியார் ஆகியோர் ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அங்கு ரத்தவெள்ளத்தில் குழந்தை துடிப்பதை பார்த்து பதறிவிட்டனர். உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் குழந்தை பிழைத்து கொண்டது. ஆனால், யயாவுக்கு ஆண்மை திறன் போய்விட்டது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் ஸான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குழந்தையை அடிக்கடி ஜியோ அடிப்பாள். பெண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் செய்கிறாள்.. மன அழுத்தம் அதிகரித்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால், இப்படி கொடூரமாக நடந்து கொள்வாள் என்று எதிர்பார்க்கவில்லை என்று கண்ணீருடன் கூறியுள்ளார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜியோவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top