மதுரையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வெங்கடேஷை, ஜப்பானை சேர்ந்த மரிக்கோ நேற்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.மதுரை மேலமாடவீதியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., மன்ற துணை தலைவர் சோமசுந்தரம். இவரது மகன் வெங்கடேஷ், ஜப்பானில் டோக்கியோவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரும், டோக்கியோவில் வங்கி ஒன்றில் பணிபுரியும் மரிக்கோவும் காதலித்தனர்.
இவர்கள் காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் பச்சைகொடி காட்டினார். நேற்று இருவரும் மதுரையில் இந்து முறைப்படி திருமணம் செய்தனர். மரிக்கோ, தன் பெயரை "பிரியங்கா' என மாற்றி, பட்டுச் சேலை அணிந்து, கூடலழகர் பெருமாள் கோயிலில் வெங்கடேஷை கரம் பிடித்தார். சோமசுந்தரம் கூறியதாவது: வெங்கடேஷூக்கு பல இடங்களில் பெண் பார்த்தும், சரியாக அமையவில்லை. பிடித்த பெண்ணை கூறினால், திருமணம் செய்து வைப்பதாக அவரிடம் தெரிவித்தேன். அவர் தயங்கியபடி, மரிக்கோ குறித்து கூறினார்.
"இணையதளத்தில்' பார்த்த போது, மரிக்கோவை எங்களுக்கு பிடித்தது.
திருமணத்திற்காக ஜன., 27ல் அவரது குடும்பத்தினர் மதுரை வந்தனர். ஜப்பானியர்கள் மரியாதை தெரிந்தவர்கள். மணமக்களுக்கு ஜப்பானிய மொழி, ஆங்கிலம் தெரிவதால், மொழி ஒரு தடையில்லை. அதேசமயம், நாங்கள் தமிழில் பேசுவதை மருமகள் புரிந்து கொண்டு சிரிக்கிறார், என்றார். அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன்செல்லப்பா உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.
0 கருத்து:
கருத்துரையிடுக