லண்டனில் எனது மகன் பிரஜாவுரிமை பெற்றிருப்பதாகக் கூறி புத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்க முற்பட்ட திருமணத் தரகரும், மாப்பிள்ளையின் மாமனாரும் பெண்ணின் உறவினர்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரிப் பகுதியில்
இடம்பெற்ற இச் சம்பவத்தினால் தலையில் காயமடைந்த திருமணத் தரகர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இடம்பெற்ற இச் சம்பவத்தினால் தலையில் காயமடைந்த திருமணத் தரகர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
சாவகச்சேரியைச் சேர்ந்த மலேசியாவில் நிற்கும் இளைஞனுக்கும் புத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
மாப்பிளை சிவலிங்கம் ஞானசபேஸ் (வயது 28) லண்டனில் மாணவர் விசாவில் சென்றுள்ளார் என்றும் நிரந்தர வதிவிட உரிமை அங்கு கிடைத்தவுடன் பெண்ணைக் கூப்பிடுவார் எனவும் பெண் பகுதியினருக்கு 'றீல்' விடப்பட்டுள்ளது.
இதையடுத்து இருவீட்டாரும் சம்மந்தக் கலப்புச் செய்துள்ளார்கள். அத்துடன் மாப்பிளைக்கு சீதனம் தேவையில்லை எனவும் தாலிக்கொடி, மற்றும் ஏனைய செலவுகளுக்கு மாத்திரம் 10 இலட்சம் ரூபா தரவேண்டும் எனவும் மாப்பிளை வீட்டுக்காரர் தெரிவித்துள்ளார். இதில் குறிப்பிட்ட தொகையில் ஒரு பகுதி கைமாறப்பட்டுள்ளது.
மணமகள் அரசாங்க அலுவலகம் ஒன்றில் வேலை செய்யும் பட்டதாரியாவார். அத்துடன் லண்டன் செல்வதற்கான ஆங்கிலப் பரீட்சையிலும் குறிப்பிட்ட புள்ளி எடுத்து வைத்திருந்ததாகத் தெரியவருகின்றது.
இந் நிலையில் குறிப்பிட்ட மணப்பெண்; லண்டனில் வசிக்கும் திருமணமான சிநேகிதி ஒருவருடன் 'பேஸ்புக்' மூலம் தொடர்பு கொண்டு தனது திருமண விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் மாப்பிளையின் லண்டன் விலாசத்தையும் கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாப்பிளையின் 'பேஸ்புக்' தொடர்பினையும் அந்த சிநேகிதிக்குக் கொடுத்துள்ளார். மாப்பிளை பற்றிய புலனாய்வில் இறங்கிய பெண்ணின் சிநேகிதி குறிப்பிட்ட விலாசத்தில் மணமகன் இல்லை எனவும் மணமகனின் இடத்தை பார்க்கும் போது இலண்டன் போல் தோன்றவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால் குழப்பமடைந்த மணப்பெண் தனக்கு 'தொலைபேசியில் தொடர்பு எடுத்த மாப்பிளையை தீர விசாரித்த போது உண்மை நிலை தெரிய வந்துள்ளது.
தான் இந்த மாதத்திற்குள் எப்பிடியும் இலண்டன் சென்று விடுவேன் என்றும் தனக்கு இலண்டன் பல்கலைக்கழக அனுமதி நிச்சயம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் 'நான் இலண்டன் என்றால் மாத்திரமா என்னை திருமணம் முடிப்பாய்','நீ அப்போ என்னை இவ்வளவு காலமும் தொடர்பு கொண்டது அன்பில்லாமலா' என சென்டிமென் வார்த்தைகளும் தெரிவித்துள்ளார்.
மணப் பெண் இது தொடர்பாக வீட்டாருக்கு தெரியப்படுத்தவே விடயம் பெரிதாகி முதலாவதாக தரகர் நையப்புடைக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் இத் திருமணத்திற்கு பெறப்பட்ட பணத்தை திருப்பி கொடுக்க சென்ற மணமகனின் தாயாரின் தம்பியாரும் பெண்ணின் சகோதரர்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
தெய்வேந்திரம் சற்குணராஜா (வயது 52) என்னும் தரகரே இவ்வாறு கடுமையாகத் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றவராவார். இது தொடர்பாக தரகரின் மனைவியால் பொலிசில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக