புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நவீன காலத்தில் ஓன்லைன் வீடியோ சட்டிங் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பிரபல்யமானதாகவும் காணப்படுகின்றது.இதுவரை காலமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கிலும், ஸ்கைப் போன்றவற்றிலும் வீடியோ சட்டிங் செய்து சலிப்பு ஏற்பட்டிருக்கும்.எனவே அறிமுகம் இல்லாத
புதிய நபர்களுடன் வீடியோ சட்டிங் செய்ய விரும்புவீர்கள். அதற்கான வசதியை சில இணையத்தளங்கள் தருகின்றன. அவற்றைப்பற்றி இங்கு பார்ப்போம்.

1. Omegle: இத்தளமானது 2009ம் ஆண்டு 18 வயதுடைய இளைஞனால் உருவாக்கப்பட்டது. இங்கு சட் செய்யும் போது எந்தவிதமான பதிவுகளும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தளத்திற்கு விஜயம் செய்ததும் ஒருவருடன் சட் செய்வதற்கான இணைப்பு ஏற்படுத்தப்படும்.


2. ChatRoulette: இது ரஷ்யாவை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவனால் உருவாக்கப்பட்ட தளமாகும். இத்தளத்தை பயன்படுத்துவதற்கு வயது வரையறைகள் இல்லை. ஆனால் சட் செய்யும் முன்பு தங்களை பதிவு செய்தல் அவசியமாகும்.


3. Rounds: ஏனைய தளங்களை விட இங்கு அதிகளவு வசதிகள் காணப்படுகின்றன. அதாவது சட் செய்வதை தவிர ஓன்லைன் கேம், Mp3 பாடல்களை கேட்டல், youtube வீடியோக்களை பார்க்க கூடியவாறு இருத்தல் போன்ற வசதிகள் காணப்படுகின்றன. இத்தளத்தின் மூலம் 18 வயதிற்கு மேற்பட்டவர்களே சட் செய்ய முடியும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top