புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தான் பெற்ற இரண்டு பெண் பிள்ளைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தாய் ஒருவர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 15 மற்றும் 17 வயதுடைய மகள்களை ஆண்களுக்கு விற்பனை செய்து அதன் மூலம் குறித்த தாய் வருமானம் ஈட்டி வந்ததாகத்
தெரிவிக்கப்படுகிறது.சொந்த வீட்டிலேயே குறித்த இரண்டு பிள்ளைகளும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாவலப்பிட்டியைச் சேர்ந்த இரண்டு வர்த்தகர்களினால் இந்தச் சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட போது, பொலிஸார் அந்த வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.

செல்வந்தர்கள் வீட்டுக்கு வந்து தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக இரண்டு சிறுமிகளும் தெரிவித்துள்ளனர். ஒரு சிறுமி பாடசாலைக்கு செல்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வந்தர்களை திருப்தி படுத்துவதற்காக ஒருவருக்கு தலா ஆயிரம் ரூபா என்ற ரீதியில் தாய் பணம் வாங்குவதாக சிறுமிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமிகள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வர்த்தகர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த தீர்மானித்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top