முகப்பு புத்தகத்தின் பாவனை நாளுக்கு நாள், கிராமத்துக்கு கிராமம் என அதிகரித்துவரும் நிலையில், நல்ல நோக்கத்திற்காக முகப்பு புத்தகத்தை பாவிப்போரை விட வேண்டத்தகாத செயல்களுக்காக பாவிப்போரின் தொகையும் அதிகரித்துள்ளது. இவ்வாறான போலிகளின்
செயற்பாடுகளால் ஏனையோருக்கு பல விதங்களிலும் இடைஞ்சல் ஏற்பட்டு வருகிறது. பிடிக்காதவர்களுடன் வீண் சச்சரவு செய்ய, வேண்டத்தகாத பிரச்சாரங்கள் செய்ய என்று இவர்களின் நோக்கம் இருக்கிறது. அதைவிட சில இணையத்தளங்கள் தங்கள் பதிவுகளை முகப்பு புத்தகத்தில் பகிர்ந்துகொள்வதற்கும் இத்தகைய போலி கணக்குகளை வைத்திருப்பார்கள்.
செயற்பாடுகளால் ஏனையோருக்கு பல விதங்களிலும் இடைஞ்சல் ஏற்பட்டு வருகிறது. பிடிக்காதவர்களுடன் வீண் சச்சரவு செய்ய, வேண்டத்தகாத பிரச்சாரங்கள் செய்ய என்று இவர்களின் நோக்கம் இருக்கிறது. அதைவிட சில இணையத்தளங்கள் தங்கள் பதிவுகளை முகப்பு புத்தகத்தில் பகிர்ந்துகொள்வதற்கும் இத்தகைய போலி கணக்குகளை வைத்திருப்பார்கள்.
இவ்வாறான போலி கணக்குகளை எவ்வாறு அடையாளம் காண்பது?
இவ்வாறான போலி கணக்குகளை சில இலகுவான வழிகள் மூலம் அடையாளம் காணலாம்.
1 - Profile Picture
இவர்களின் Profile Picture ஐ வைத்து ஓரளவு கணிக்கலாம். Profile Picture ஐ நீண்டகாலம் மாற்றாமல் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு பிரபல, கவர்ச்சியான பெண்களின் புகைப்படத்தை Profile Picture ஆக வைத்திருப்பார்கள். இவர்களின் புகைப்பட ஆல்பத்தில் இரண்டிற்கு மேற்பட்ட படங்கள் இருப்பது அரிது.
2: இவர்களுடைய நண்பர்கள் பட்டியலில் அதிகளவான ஆண்கள் நண்பர்களாக இருப்பார்கள். ( இதில் என்ன தவறு என்கிறீர்களா? உண்மையான பெண்கள் தமது சுய பாதுகாப்பு கருதி முகம்தெரியாத ஆண்களை நண்பர்களாக இணைப்பதில்லை)
3: யார்மேலாவது சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் Facebook இல் இணைந்த திகதியினையும் அவர்களது நண்பர்கள் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பாருங்கள். குறைந்த காலத்தில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் பட்டியலில் இருந்தால் அந்தக்கணக்கு போலியாக இருப்பதற்கான சாத்தியம் அதிகள். காரணம் விளம்பரத்துக்காக கண்டபடி நண்பர்களை சேர்ப்பார்கள்.
4: அவர்களின் Profile முழுமையான தகவல்களுடன் இருக்கிறதா என பாருங்கள். உண்மையான நபர்களின் Profile முழுமையாக நிரப்பப்பட்டும், சுவாரசியமாகவும் இருக்கும். ஆனால் போலி நபர்களின் Profile கள் முழுமையாக நிரப்பப்படாமலும், ஏனோதானோ என கண்டபாட்டுக்கு நிரப்பப்பட்டும் இருக்கும்.
5 : இவர்களுடைய Wall ஐ பாருங்கள். Wall முழுவதும் நண்பர்களை இணைத்துக்கொண்ட தகவல்கள் மட்டுமே இருக்கும். இணையத்தளங்கள் வைத்திருக்கும் போலி கணக்காயின் wall முழுவதும் அவர்களின் பதிவுகள் பகிரப்பட்டிருக்கும்.
6: அவர்களுடைய Page Likes ஐ பாருங்கள். எந்தவொரு Page Likes உம் இருக்காது. அப்படி ஒன்று இரண்டு இருந்தாலும் அது அவர்களின் சொந்த (இணையத்தளங்களின்) Page ஆகத்தான் இருக்கும்.
7: போலி என சந்தேகப்படுவோரின் Activities ஐ பாருங்கள். உதாரணமாக Comments, Likes, Status. போலி கணக்காயின் இவை அதிகம் இருக்காது.
8: ஆண்களுக்கு!... பெண்களின் பெயரில் Friend Request வந்தால் அவர்களின் Profile ஐ முழுவதுமாக ஆராயுங்கள். காரணம் உண்மையான கணக்கு வைத்திருக்கும் பெண்கள் வலிந்து போய் முகம்தெரியாத ஆண்களுக்கு Friend Request கொடுப்பதில்லை.
9: போலி கணக்குகளில் அநேகமானவை பெண்களின் பெயரிலேயே இருக்கும். அதுவும் 1988 தொடக்கம் 1992 ஆம் ஆண்டு பிறந்ததாகவே Profile இல் குறிப்பிடப்பட்டிருக்கும்.
0 கருத்து:
கருத்துரையிடுக