சகோதரியின் மகளான 19 வயது யுவதியை கற்பழித்தார் என்கிற சந்தேகத்தில் மாத்தளையைச் சேர்ந்த ஐயர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.இவர் இரு பிள்ளைகளின் தந்தை. மகாவெல பொலிஸார் கைதை மேற்கொண்டு உள்ளனர்.
சுயவிபரக் கோவை ஒன்றை தயாரித்து தருகின்றார் என்று சொல்லி மருமகளை கொலஹென்னாவவில் உள்ள ஓய்வு இல்லத்துக்கு அழைத்துச் சென்று இருக்கின்றார்.
எட்டு மாதங்கள் மருமகளை அடைத்து வைத்து இருந்தார் என்றும் அக்கால கட்டத்தில் பல சந்தர்ப்பங்களிலும் கற்பழிப்பு மேற்கொண்டு இருக்கின்றார் என்றும் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்து உள்ளது.
அஜீரணம் காரணமாக யுவதி சில நாட்களுக்கு முன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இவர் கர்ப்பம் அடைந்து இருக்கின்றார் என்று மருத்துவ பரிசோதனைகள் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்தே மாமனின் கற்பழிப்பு நடவடிக்கையை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக