புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 42 தற்கொலைகள் தங்கள் நாட்டில் நிகழ்ந்தது பற்றி 2003 ஆம் ஆண்டில் லுதியேனியா பெருமை அடித்துக் கொண்டது. சாலை விபத்துகளில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் ஒரு பத்தாண்டு காலத்திற்கு முன் இரண்டு மடங்கு இறந்தவர் களை விட இது 1,500 அதிகமானது.
அனைத்துலக அளவில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது,
லுதியேனியாவின் தற்கொலைகள் இங்கிலாந்தின் தற்கொலை எண்ணிக்கையில் ஆறில் ஒன்றாகவும், அமெரிக்காவின் தற்கொலை எண்ணிக்கையில் அய்ந்தில் ஒன்றாகவும், உலக சராசரியைப் போல் மூன்று மடங்காகவும் இருந்தது. ஆனால் இதற்கான காரணம் என்ன என்பது எவருக்குமே தெரியவில்லை. அதிக அளவில் தற்கொலைகள் நிகழும் நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருக்கும் நாடுகள் பால்டிக் நாடுகளாகவோ அல்லது சோவியத் யூனியனின் உறுப்பு நாடுகளாகவோ இருந்தது ஆர்வம் அளிக்கும் செய்தியாக இருக்கிறது. உலகிலேயே நரம்பியல் நிபுணர்கள் அதிக அடர்த்தியாக இருக்கும் நாடு லுதுவேனியா என்பதும் இதன் காரணமாக இருக்கக்கூடும். பால்டிக் நாடுகள் உள்ளிட்ட அனைத்துலக நாடுகளில்  தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகமுள்ளவர்கள் கிராமப் பகுதிகளில் வாழும் ஆண்கள்தான் (இளைஞர்களும் முதியவர்களும்).
இதில் ஏதோ அர்த்தமிருக்கிறது. போராட்டம் நிறைந்த பண்ணை வாழ்க்கையில் நேரம் செலவிட்ட எவர் ஒருவருக்கும் மது, தனிமை, கடன், தட்பவெப்பநிலை, உதவி கேட்க முடியாத நிலை ஆகியவற்றுடன் சேர்ந்து துப்பாக்கிகள், ஆபத்தான வேதியியல் பொருள்கள் அருகாமையில் இருத்தலும் ஒரு அழிவைத் தரும் கலவையாக அமைந்துவிடுகிறது. இதற்கு விதிவிலக்கு சீனாவும், தென்னிந்தியாவும் ஆகும். இங்கு கிராமப் புறங்களில் உள்ள இளம் பெண்கள் தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருப்பவர்கள். சீனாவில் தற்கொலை விகிதம் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 30; ஆனால் தென்னிந்தியாவிலோ இது 148 ஆக இருக்கிறது.  சீனாவில், இளம் மணமகள்களை மணமகன்கள் விட்டுவிட்டுச் செல்வதால் தனிமைப் பட்டுப் போவதுதான் இதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது. கணவர்கள் திருமணமான உடனே வேலைக்காக நகரங்களுக்குச் சென்று விடுகின்றனர். இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களில் மூன்றில் ஒரு பங்கு பதின்ம வயதுப் பெண்கள் ஆவர்.
பொதுவாகவே தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேலும், ஒவ்வொரு 42 வினாடிகளுக்கு ஒரு தற்கொலையும் நிகழ்கிறது. இது அனைத்து வன்முறைச் சாவுகளில் பாதி அளவாகும். போரில் இறப்பவர்களை விட அதிகமாக மக்கள் இப்போது தங்களையே கொன்றுகொள்கின்றனர். எல்லோரும் தங்களைக் கொன்றுகொள்கிறார்கள் என்று நீண்டகாலமாக கூறப்பட்டு வந்த ஸ்வீடன் நாடு அதிக அளவு தற்கொலை செய்து கொள்ளும் மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இருபது இடத்தில் கூட இல்லை. ஸ்வீடனில் அதிக மக்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற கட்டுக்கதைக்கு சரியான வரலாற்று ஆதாரம் உலகப் போருக்குப் பின் மேற்கொள்ளப்பட்ட மறு கட்டமைப்புப் பணியில் காணாமல் போய்விட்டது. ஆனால் 1953-56 காலத்தில் அமெரிக்க அதிபராக இருந்த அய்சனோவர் அந்த நேரத்தில் ஸ்வீடனில் இருந்த அதிக தற்கொலை அளவை, மகிழ்ச்சி நிறைந்த, ஸ்வீடன் நாட்டின் சமதர்ம மக்களாட்சியின் ஆபத்தான முதலாளித்துவ எதிர்ப்பு உணர்வை அழிக்கப் பயன்படுத்திக் கொண்டார் என்று அந்நாட்டு மக்கள் பலர் குற்றம் சாற்றுகிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top