இங்கிலாந்தின் முன்னணி சுற்றுலா சஞ்சிகையான கண்டே நாஸ்ட்டினால் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பின் படி உலகின் சுற்றுலா மேற்கொள்ளக் கூடிய முதல் 5 நாடுகள் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. ஓய்வாக நேரத்தைக் கழிப்பதற்கும், அரிய சுற்றுலாத்துறை
சார் ஸ்தானங்களை பார்வையிடுவதற்கும் இலங்கையில் அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை குறித்த பட்டியலில், பிரித்தானியா, அவுஸ்திரேலியா, மற்றும் அபுதாபி ராஜ்ஜியங்களை விட முன்னிலையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, 2012 ம் ஆண்டில் உலகில் சுற்றுலா மேற்கொள்ளக் கூடிய நாடுகளுள் முன்னிலை வகிக்கும் இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கு உயர்வான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் கண்டே நாஸ்ட் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக