காலம் சென்ற பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியாரின் மகனான சுகுமாறன் நம்பியார் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 60.நம்பியாரின் மகன் சுகுமாறன் நம்பியார். இவர் அகில இந்திய ஐயப்ப சேவா சங்கத் தலைவராகவும், பாஜக தேசிய நிர்வாகக் குழு
உறுப்பினராகவும் இருந்தார். பாஜகவில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
உறுப்பினராகவும் இருந்தார். பாஜகவில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவர் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
பாஜக தலைவர் அத்வானி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடன் நல்ல நட்புறவைப் பேணி வந்தவர் சுகுமாறன் நம்பியார். இதன் அடிப்படையில் 1998 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் பாஜக, அதிமுக இடையே கூட்டணி ஏற்படவும் பெரும் பங்காற்றினார்.
ராணுவத்தில் முன்பு பயிற்சியாளராகப் பணியாற்றியவர் சுகுமாறன். இதன் மத்திய கருப்புப் பூணைப் பாதுகாப்புப் படையின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். தமிழகத்தில் கருப்புப் பூணைப் படையை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
2004 லோக்சபாத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட செ. குப்புசாமியிடம் தோல்வி அடைந்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக