புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் உடைந்து விழும் நிலையில் மின்கம்பம் ஒன்று நீண்டகாலமாகக் காணப்படுகிறது. யாழ். பருத்தித்துறை வீதியில் இருபாலைச் சந்திக்கு அருகில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்தை அண்மித்து இம் மின்கம்பம் உள்ளது.உடைந்துவிழும் நிலையில் நீண்டகாலமாகக்
காணப்படும் இம் மின்கம்பம் குறித்து இலங்கை மின்சார உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இவ் வீதியால் பயணிப்போர்களால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வீதியில் பயணிப்பவர்கள் இக் கம்பத்திற்கு அருகில் செல்லும்போது மிகுந்த அச்சத்துடன் செல்வதாகவும் இக்கம்பத்தை அகற்றி புதிய கம்பம் ஒன்றை நடுவதற்கு மின்சாரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top