புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆவரங்கால் வல்லைவெளி வீதியின் அருகில் திறந்தவெளியாக உள்ள கிணறு ஒன்றினால் அவ் வீதியில் செல்லும் வாகனங்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. ஆவரங்கால் சந்தியில் இருந்து வல்லைவெளி நோக்கி செல்லும் வீதியில் 0.9 கி.மீ தூரத்தில் குறித்த கிணறு காணப்படுகின்றது.இக்
கிணறு திறந்த வெளியாக உள்ளமையினால் வீதியில் வாகனத்தில் செல்வோர் பிற வாகனங்களுக்கு ஒதுங்கிச் செல்லும் வேளை கிணற்றுக்குள் விழ நேரிடும் சந்தர்ப்பங்கள் அதகமாக உள்ளது.

இக் கிணறு பாதை அகலிப்பின் பின் எதிரே வரும் வாகனத்திற்கோ அல்லது முந்திச் செல்ல முற்படும் வாகனத்திற்கோ ஆபத்தைத் தரக்கூடும் என வாகன சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.கிணறு அமைந்துள்ள காணிக்காரர் அதனை கட்டாமல் பொறுப்பற்ற வகையில் உள்ளதாகவும் வீதியில் செல்லும் வாகனங்களின் நன்மை கருதி வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாகவும் வாகனச் சாரதிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top