வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது,சட்டவிரோதமாக ஒரு தொகை அந்நிய நாணயங்களை வெளிநாட்டிற்கு கடத்த முற்பட்ட சந்தேகநபர் விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுமார் 49 இலட்சத்து நான்காயிர்த்து 500 ரூபா பெறுமதியான அந்நிய நாணயங்கள் சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் ஏ.ஜே.ஜீ.எல்.எப்.பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
அந்நிய நாணயத் தெகையை தமது பயணப்பொதியில் மறைத்து சந்தேகநபர் சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து அமெரிக்கா டொலர், யூரோ, ஜப்பான் யென் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் ஆகிய நாணயங்கள் கைப்பற்றப்பட்டதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் கூறினார். இந்திய பிரஜை ஒருவரே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை தடுத்து வைத்து சுங்கப் பிரிவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பிரதி சுங்கப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக