புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தொல்லை தாங்க முடியாமல் நள்ளிரவில் கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை மனைவி ஊற்றியுள்ளார். உயிருக்கு போராடிய கணவனுக்கு சேலம் ஜி.எச்.ல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் மேச்சேரி அரங்கனூரைச் சேர்ந்தவர் பெரியசாமி (32). லாரி டிரைவர். இவரது மனைவி சித்ரா (28). பெரியசாமிக்கு
ஈரோட்டில் உள்ள ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அடிக்கடி ஈரோட்டில் தங்கியுள்ளார். 
வீட்டு செலவுக்கு சரியாக பணம் தராததால் சித்ரா அவதிப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சித்ராவின் நடத்தையில் பெரியசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டு அதனாலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் பெரியசாமி மனைவியுடன் படுத்து தூங்கியுள்ளார். தொடர் தகராறு, டார்ச்சர் காரணமாக ஆத்திரமடைந்த சித்ரா, நள்ளிரவில் கணவன் அயர்ந்து தூங்கும்போது சமையல் எண்ணெயை கொதிக்க வைத்து கணவனின் இடுப்பில் ஊற்றி விட்டு தப்பி ஓடிவிட்டார். பெரியசாமி வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், பெரியசாமியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்கு பதிந்து சித்ராவை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top