புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

YOUTUBE தளத்தில் நமக்கு தேவையான எந்த வீடியோவையும் பார்க்க முடியும். தேவையெனில் வேண்டிய வீடியோவினை பதிவேற்றமும்/பதிவிறக்கமும் செய்து கொள்ளவும் முடியும்.இந்த YOUTUBE தளமானது கூகுள் நிறுவனத்துடையது. இந்த YOUTUBE தளத்தில் ஒரு சில வீடியோக்கள் முடக்கப்பட்டிருக்கும், அதுபோன்ற வீடியோக்கள் பெரும்பாலும் பயனர்களை கவர்ந்தவையாக இருக்க கூடும்.

அந்த நிலையில் அதுபோன்ற குறிப்பிட்ட வீடியோவினை காண ஒரு வழி உள்ளது. ஆனால் தற்போது யூடியூப் தளத்தில் முடக்கப்பட்டிருக்கும் வீடியோவினை காண நெருப்புநரி உலாவியில் ஒரு நீட்சி உள்ளது. அதன் மூலம் முடக்கப்பட்ட வீடியோக்களை காண முடியும்.

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று நீட்சியினை நெருப்புநரி உலாவியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு முறை நெருப்புநரி உலாவியினை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் அந்த குறிப்பிட்ட யூடியூப் வீடியோவினை காணும் போது “ProxTube is unblocking this video” என்ற எச்சரிக்கை செய்தி தோன்றும்.

யூடியூப் முடக்கப்பட்ட வீடியோக்களை காண இந்த Proxtube நீட்சி உதவுகிறது. பல்வேறு நாடுகளில் முடக்கப்பட்டிருக்கும் வீடியோவினை காண இந்த நீட்சி உதவி புரிகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top