மாஜி மனைவி வீட்டின் மீது எரிபொருள் நிரப்பிய டேங்கர் லாரியை மோதினார் கணவன். இதனால் லண்டனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்தின் டார்செட் நகரில் உள்ளது உல் பகுதி.இங்கு வசிப்பவர் கிறிஸ்டியன் லாரன்ஸ் (51). நாய்கள் விற்பனை மற்றும் அச்சக தொழில் செய்து
வருகிறார். இவருடைய கணவர் ஹக் பிலிங்டன் (53). ஆயில் கம்பெனியில் டிரைவராக பணிபுரிகிறார்.
வருகிறார். இவருடைய கணவர் ஹக் பிலிங்டன் (53). ஆயில் கம்பெனியில் டிரைவராக பணிபுரிகிறார்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி கெரசின் ஏற்றிய டேங்கர் லாரியுடன் மனைவி வசிக்கும் பங்களாவுக்கு வந்தார் பிலிங்டன். ஆத்திரத்தில் பயங்கர வேகத்தில் சென்று பங்களா மீது டேங்கர் லாரியை மோதினார்.
முன்னதாக வீட்டு முன் பக்க கதவு மீது கெரசின் ஊற்றியுள்ளார். இதனால், பங்களா தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதற்கிடையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கிறிஸ்டியன் போலீசில் புகார் செய்தார்.
தலைமறைவான பிலிங்டனை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு, தனது பெயர், பிறந்த தேதி மட்டும் தெரிவித்த பிலிங்டன், தனக்கென்று நிரந்தர முகவரி எதுவும் இல்லை என்று கூறினார். இந்த வழக்கு 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பிய டேங்கர் லாரியை வீட்டின் மீது மோதி மனைவியை கொல்ல முயற்சித்த சம்பவம் டார்செட் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக