புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ் மேல் நீதிமன்ற வழக்குடன் தொடர்புடைய கணவனைப் பிணையிலெடுப்பதற்காக தனது தாயிடம் நகை திருடிய பெண் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.நகை திருடிய குற்றத்தை ஒப்புக் கொண்டதை யடுத்து அவருக்கும் அவருக்கு உடந்தையாக விருந்த
மற்றொருவருக்கும் தலா ஆயிரத்து 500 ரூபா வீதம் அபராதம் அளித்துத் தீர்ப்பளித் துள்ளதோடு 4வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டன யும் விதித்தது நீதிமன்று.

விசாரணையிலிருந்து வந்த இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதவான் எஸ். எம். மகேந்திரராசா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

2010 ஆம் ஆண்டு இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னர் பிறிதொரு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த நகை திருடிய பெண்ணின் கணவரான சந்தேக நபர் மீதான வழக்கு யாழ் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.

அவரைப் பிணையில் விடுவிக்க நிதிமன்று உத்தரவிட்டது. ஆனால் அவரைப் பிணையெடுக்க அவரது மனைவியிடம் பண வசதி இருக்கவில்லை. அதனால் தனது தாயிடமிருந்த ஒரு தொகை நகையைத் திருடிவிட்டார்.

தனது நகை திருடுபோனது சம்பந்தமாக அந்தப் பெண் (தாய்) ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடும் செய்திருந்தார். பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அந்தத் தாயின் மகளையும் இளைஞர் ஒருவரையும் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்று வந்தது. கடந்த இரு நாட்களுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் நகை திருடிய குற்றத்தை மன்றில் ஒப்புக் கொண்ட தையடுத்து அவர்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top