கன்னத்தில் அடித்ததால் அவமானம் தாங்காமல், இளம் பெண் தீ குளித்தார். காப்பாற்ற சென்ற தாயும் உடல் கருகி பலியானார்.வியாசர்பாடி ரேணுகா அம்மன் கோவில் முதல் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம்.போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.இவரிடம் பெரவள்ளுர்
ஜி.கே.எம்.,காலனியைச் சேர்ந்த இன்ஜினியர் உமாமகேஸ்வரன் என்பவர் தன் திருமணத்திற்கு வீடியோ,போட்டோ எடுக்க 17 ஆயிரம் ரூபாய் முன் பணம் கொடுத்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், ஆல்பம், சி.டி.,கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.
ஜி.கே.எம்.,காலனியைச் சேர்ந்த இன்ஜினியர் உமாமகேஸ்வரன் என்பவர் தன் திருமணத்திற்கு வீடியோ,போட்டோ எடுக்க 17 ஆயிரம் ரூபாய் முன் பணம் கொடுத்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், ஆல்பம், சி.டி.,கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.
கடந்த ஞாயிறன்று, உமாமகேஸ்வரன் மகாலிங்கம் மனைவி ரேவதியை சந்தித்தார். கணவர் ஆல்பம் தராதது குறித்து பிரச்னை செய்துள்ளார்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த உமாமகேஸ்வரன்,ரேவதியின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதுகுறித்து,ரேவதி எம்.கே.பி.,நகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மனமுடைந்த ரேவதி, அதே பகுதியில் உள்ள தாய் சரஸ்வதி வீட்டிற்கு சென்று, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
அவரை காப்பாற்ற போன தாயும் தீயில் சிக்கினார். ஆபத்தான நிலையில் கே.எம்.சி.,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
செம்பியம் போலீசார், உமாமகேஸ்வரனை கைது செய்து,சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த ரேவதியின் உறவினர்கள் பெரம்பூர் பி.பி.சாலையில் மறியல் செய்தனர்.
போலீசார் குற்றவாளி கைது செய்யப்பட்டதை உறுதி செய்த பின் கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக