புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பத்திரிகைகளில் மணமகள் தேவை பகுதியில் விளம்பரம் செய்து, நாட்டின் பல பாகங்களிலும் 35 பெண்களை ஏமாற்றி சுமார் 60 இலட்சம் ரூபா மோசடி செய்த நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.கலிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் போலியாகத் தயாரிக்கப்பட்ட
சட்டத்தரணி அடையாள அட்டையினைப் பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து தங்க நகைகள் அடங்கலாக 5 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டதாக நுவரெலியா வலய குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top