புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகின் மிகப்பெரிய இறால் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 11 இஞ்சிகள் நீளமான குறித்த இறால் இனம் ஆழமான கடற்பகுதியில் தான் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. supergiant என்று அழைக்கப்படும் குறித்த இனம் நியூசிலாந்தின் கடற்பிரதேசத்தில் இருந்து நான்கு மைல்கள்
தொலைவில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



வழமையாக 0.8in-1.2in நீளமுள்ளதாக குறித்த இறால் இனம் காணப்படுகின்றது. வழமையான இறாலில் இருந்து பத்து மடங்கு பெரியதான இந்த இறால் இனத்தை Aberdeen பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பிரிவினரே கண்டுபிடித்துள்ளனர்.

விசேட கமராக்களின் உதவியுடன் தான் குறித்த இறால் இனம் படமாக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இனி வருங்காலங்களில் இறால் பிரியர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top