புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பைல்களின் மொத்த தொகுப்பை அதன் டிரைவ் வாரியாகக் காண விண்டோஸ் எக்ஸ்புளோரர் பயன்படுத்துகிறோம். இவை நமக்குக் காட்டப்படும் காட்சியில் மேலாக இவற்றின் தலைப்புகளைக் காணலாம். அவை நாம் செட் செய்ததற்கு ஏற்றபடியான எண்ணிக்கையிலும் வகைகளிலும்
இருக்கும். Name, Size, Type, Date Modified என்றபடி அவை கிடைக்கும். சில வேளைகளில் இவற்றின் கீழாகக் கிடைக்கும் தகவல்கள், எடுத்துக்காட்டாக பைல்களின் பெயர்கள் சற்றுப் பெரியதாக இருந்தால் அவை Name டேப்பிற்குள் முழுமையாகத் தெரியாது. அவற்றை முழுமையாகக் காண வேண்டும் என்றால் மேலே உள்ள டேப்களுக்கு இடையே கர்சரைக் கொண்டு சென்று டேப்களின் நீளத்தை கர்சரால் இழுத்துச் சரி செய்துவிடலாம்; அதாவது நீட்டி அல்லது சுருக்கிவிடலாம்.
இதைக் காட்டிலும் இன்னொரு சிறந்த வழி உள்ளது. டேப்களைப் பிரிக்கும் இடைக் கோட்டில் கர்சரைக் கொண்டு சென்று டபுள் கிளிக் செய்தால் இந்த டேப் வெளி தானாகத் தன்னைச் சரி செய்து கொள்ளும். இந்த ட்ரிக் எக்ஸெல் மற்றும் அவுட்லுக் போன்ற அனைத்து புரோகிராம்களிலும் செயல்படும்.
எப்போதாவது ஒரு போல்டரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பைல்களில் ஒன்றைத் தேடும் முயற்சியில் சலிப் படைந்து இருக்கிறீர்களா? சில வேளைகளில் பைலின் பெயரைச் சரியாகத் தெரியாமல் தொடர்ந்து தேடுவோம். அப்படிப்பட்ட வேளைகளில் அந்த பைலைக் கடைசியாக எப்போது எடிட் செய்தோம் என்று தெரிந்தால் அதனை எளிதாகக் கண்டுவிடலாம். அல்லது அது என்ன வகை பைல் என்று தெரிந்தாலும் கண்டுவிடலாம். இதற்கு பைல்களை வரிசைப்படுத்த வேண்டியதுதான் வழி.
Name, Size, Type, Date Modified என்பனவற்றில் Name என்ற டேப்பின் மேலாகக் கிளிக் செய்தால் பைல்கள் அவற்றின் பெயர்களின் அடிப்படையில் அகர வரிசைப்படி வரிசைப்படுத்தப்படும். அதே போல Size என்ற டேப்பின் தலைப்பில் கிளிக் செய்தால் பைலின் அளவின் அடிப்படையில் அவை வரிசைப் படுத்தப்படும். Type என்ற டேப்பின் மீதாகக் கிளிக் செய்தால் பைல்கள் அவற்றின் வகைப்படி, எடுத்துக்காட்டாக jpeg, doc, exe, mp3, pmd, என்றபடி வரிசைப்படுத்தப்படும். Date Modified என்ற டேப்பில் கிளிக் செய்தால் நாம் அந்த பைல்களை எடிட் செய்த தேதிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும். வரிசைப்படுத்தப் பட்ட பின் நாம் தேடிய பைல்களைக் கண்டறிவது எளிதான வேலையாகி விடுமே.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top