புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வாகனசாரதி அனுமதிப்பத்திரம்  கேட்டு சவுதியில் பெண் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஓட்டளிக்கும் உரிமையும் இல்லாமல் இருந்தது.
சமீபத்தில் இதற்கான தடை விலக்கப்பட்டு
பெண்களும் ஓட்டளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால்,  வாகனசாரதி அனுமதிப்பத்திரம் தடை மட்டும் நீடிக்கிறது. இந்நிலையில், ரியாத்தில் உள்ள மனால் அல் ஷெரீப் என்ற பெண் டிரைவிங் லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்தார்.

3 மாதங்களாகியும் அவருக்கு போக்குவரத்து துறை இயக்குனரகத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கூறியுள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனால், கடந்த நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து மனால் நிருபர்களிடம் கூறுகையில், பெண்களுக்கு டிரைவிங் லைசன்ஸ் வழங்க கூடாது என்று சவுதி சட்டத்தில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. தனியாக வங்கி கணக்கு தொடங்கவும், பாஸ்போர்ட் எடுக்கவும், ஆண் துணை இல்லாமல் பள்ளி செல்லவும் பெண்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவை எல்லாம் சட்டவிரோதம் என்று சட்டத்தில் கூறப்படவில்லை.

ஆனால் மதத் தலைவர்கள்தான் தடை விதிக்கின்றனர். என்னை போலவே பல பெண்கள் லைசன்ஸ் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளனர். நான் துணிந்து வழக்கு தொடுத்துள்ளேன். இதனால் மற்ற பெண்களும் தைரியமாக  வாகனசாரதி அனுமதிப்பத்திரம்  கேட்டு வருவார்கள் என்றார்.

மனாலின் வழக்கு சவுதி உள்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சவுதி சாலைகளில் தடையை மீறி மனால் கார் ஓட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top