புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காதல் விவகாரத்தால் யுவதியொருவர் தன்னைத்தானே தீயிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள கோரச் சம்பவமொன்று கொழும்பு 14 பர்கியுசன் வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

21 வயதுடைய ரசிகா சுதர்ஷனி கல்தேரா என்ற யுவதி வெளிநாட்டிலிருக்கும் தனது காதலனுடன் தொலைபேசியூடாக கதைத்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினையடுத்து அந்த யுவதி தன்னைத்தானே தீயிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு எரிகாயங்களுக்குள்ளான குறித்த யுவதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிரான்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top