புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மாரடைப்பால் இறந்த காதல் கணவனை பிரிய மனம் இல்லாத மனைவி, சயனைடு தின்று கணவனின் மார்பிலேயே சாய்ந்து உயிர் விட்டார். கோவை மரக்கார நஞ்சப்ப கவுடர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(42). நகை பட்டறை நடத்தி வந்தார். இவரது மனைவி கிருஷ்ணவேணி(38).
12 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்நிலையில் இன்று காலை செந்தில்குமார், நெஞ்சு வலிப்பதாக மனைவியிடம் கூறியுள்ளார். உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 செந்தில்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதைக்கேட்ட கிருஷ்ணவேணி மருத்துவமனையிலேயே அழுது புரண்டார்.

அதே ஆம்புலன்ஸ்சில் செந்தில் குமாரின் உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. உறவினர்களும் வீட்டில் கூடினர். ஒரு சில நிமிடங்கள் மாயமான கிருஷ்ணவேணி, பின்னர் மீண்டும் வந்து கணவனின் மார்பில் தலைவைத்து கதறியழுதார்.

சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். உறவினர்கள் பார்த்தபோது அவர் சயனைடு தின்றது தெரியவந்ததது. உறவினர்கள் அவரை அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவ பரிசோதனையில் சில நிமிடங்களுக்கு முன்பே அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.

இச்சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top