புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வத்தளையில் தமிழ் தம்பதியர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து காணப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.எவரிவத்தை வீதியில் வசித்து வந்த ராமச்சந்திரன் திரிவிலங்கம் (62) மற்றும் அவரது மனைவியான கல்யாணி (62) ஆகிய இருவருமே தமது வீட்டுக்குள்ளி லிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் திங்கட்கிழமை (6) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சடலங்களை மீட்ட வத்தளை பொலிஸார் பிரேத பரிசோதனைகளுக்காக அவற்றை ராகமை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மேற்படி, தமிழ் தம்பதியினரின் உயிரிழப்புக்கு காரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து வத்தளைப் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித் திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top