இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், கோவில் நகரமான மதுரையில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில், 48 அடி நீள தோசையை உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.இந்த சாதனை மூலம், ஏற்கனவே ஆந்திரா மாநிலம் விஜயவாடா ஹோட்டல் அசோசியேசன் சார்பில்
மேற்கொள்ளப்பட்டிருந்த 38.2
அடி நீள தோசை கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்டிருந்த 38.2
அடி நீள தோசை கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கின்னஸ் சாதனைக்கு முழு ஓத்துழைப்பு அளித்த 20 தோசை மாஸ்டர்கள் மற்றும் மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சாதனை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சமையற்கலைஞர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.
இக்கண்காட்சியின் மூலம் கிடைக்கும் பணம், அரசுப் பள்ளிகள் மற்றும் அனாதை இல்லங்களில் படித்து வரும் குழந்தைகளில் கல்விக்காக பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக