புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவில் கணவன் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரை விட்ட சம்பவம், உண்மையான காதல் இன்னும் உலகத்திலிருந்து அழியவில்லை என்பதை காட்டுகிறது.தமிழ்நாட்டில், பனப்பாக்கம் அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி(வயது 98). தையல் தொழிலாளியான
இவர், கடந்த சில திகதிகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். 

நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார். நேற்று காலை முதல் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் வந்து துரைசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். 

இறுதி சடங்கு மாலை 5 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் நடந்தது. இதற்கிடையில் பகல் 1 மணிக்கு துரைசாமியின் உடலைப் பார்த்து அவரது மனைவி வரதம்மாள்(வயது 92), கதறி அழுதார். 


வாழ்த்70 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த என்னை விட்டு பிரிந்து சென்று விட்டீர்களே என்று தனது மார்பில் அடித்து கொண்டு கணவனின் காலடியில் சரிந்தார். அவரை உறவினர்கள் எழுப்ப முயன்ற போது வரதம்மாள் இறந்தது தெரியவந்தது. 

துரைசாமி பிணத்தின் அருகிலேயே வரதம்மாள் பிணத்தை வைத்து பெரிய மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

இதையடுத்து கணவன்-மனைவி இருவரையும் ஒரேபாடையில் ஊர்வலமாக எடுத்து சென்று சுடுகாட்டில் ஒரே இடத்தில் வைத்து தகனம் செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top