மனிதர்களில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு பாரம்பரியமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.பெற்றோருக்கு ஏதேனும் ஒரு நோய் இருந்தால் அது பாரம்பரியமாக அவர்களின் குழந்தைகளையும் தாக்குகின்றது. ஆனால் இதயநோயை பொறுத்தவரை அது பாரம்பரியமாக
வரும் நோய் இல்லை என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது.
உடலில் கொழுப்பு அதிகமானால் இதய நோய் ஏற்படும், ஆனால் இப்போது இதய நோயக்கு பாரம்பரியமும் காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள லைஜெஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதய நோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்த 3 ஆயிரத்து 233 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் இதய நோய்க்கும், பாரம்பரியத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தந்தைக்கு இதய நோய் இருந்தால் அவரிடம் இருந்து குழந்தைக்கு வரும் Y குரோமசோம் மூலம் இதய நோய் குழந்தையையும் தொற்றி கொள்ளும் என்று கண்டுபிடித்து உள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக