காதலில் நீங்கள் எப்படி, உங்கள் லவ்வர் எப்படி, உங்கள் காதல் எப்படி என்பதை தெரிந்துகொள்ள 6 கேள்விக்கு பதில் அளியுங்கள்.
1. உலகம் அழியும் நேரத்தில், நீங்கள் மனசு வைத்தால் ஒரே ஒரு விலங்கை காப்பாற்றலாம். எந்த விலங்கை காப்பாற்றுவீர்கள்?
அ. எலி, ஆ. ஆடு, இ. மான், ஈ. குதிரை
2. எந்த விலங்காக மாற உங்களுக்கு ஆசை?
அ. நாய், ஆ.பூனை, இ.குதிரை, ஈ.பாம்பு
3. உங்களுக்கு அதிசய சக்தி கிடைக்கிறது. நீங்கள் நினைத்தால் ஒரு விலங்கினத்தை அழித்துவிடலாம். எதை அழிப்பீர்கள்.
அ. சிங்கம், ஆ. பாம்பு, இ. முதலை, ஈ.சுறா மீன்
4. ஏதேனும் ஒரு விலங்குடன் பேசலாம். எந்த விலங்குடன் பேசுவீர்கள்?
அ. ஆடு, ஆ.குதிரை, இ.எலி,
ஈ.பறவை
5. யாரும் இல்லாத தீவு. அதில் உங்களோடு ஒருவர் அனுமதி. யாரை தேர்வு செய்வீர்கள்?
அ. மனிதன், ஆ.பன்றி, இ.மாடு, ஈ.பறவை
6. நீங்கள் நினைத்தால் எந்த விலங்கையும் அடக்க முடியும். எதை அடக்குவீர்கள்?
அ. டைனோசர், ஆ.புலி, இ.பனிக்கரடி, ஈ.சிறுத்தை
6 கேள்விகளுக்கும் பதிலை டிக் செய்துவிட்டீர்களா? இனி உங்கள் லவ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
1. நீங்கள் காப்பாற்ற நினைக்கும் விலங்கு..
எலி: உங்கள் லவ்வர் பார்க்கத்தான் கடுகடு. உள்ளுக்குள் மிகமிக சாஃப்ட்.
ஆடு: உங்கள் லவ்வர் பணிவு, இளகிய உள்ளம் கொண்டவர்.
மான்: சட்ட திட்டம், நீதி, நேர்மை ஆகியவற்றில் அசாத்திய நம்பிக்கை உள்ளவர் உங்க ஆள்.
குதிரை: உங்கள் லவ்வருக்கு சுதந்திரம், கட்டுப்பாடு கொஞ்சம்கூட ஆகாது. சுதந்திர பறவை.
2. எந்த விலங்காக மாற ஆசை..
நாய்: லவ்வரிடம் உங்களை உண்மையானவராக காட்டிக் கொள்ள விரும்புபவர் நீங்கள்.
பூனை: ஸ்டைலானவராக காட்டிக் கொள்ள பிரியப்படுகிறவர் நீங்கள்.
குதிரை: பாசிட்டிவ் எண்ணம் உள்ளவராக காட்டிக் கொள்ள ஆசைப்படுபவர் நீங்கள்.
பாம்பு: வளைந்து நெளிந்து அனுசரித்து செல்பவராக காட்டிக் கொள்வீர்.
3. நீங்கள் அழிக்க நினைக்கும் விலங்கு..
சிங்கம்: லவ்வர் இறுமாப்பு, அகந்தை, அதிகாரப்போக்கில் நடப்பவர்.
பாம்பு: உங்கள் ஆளுக்கு பொசுக்பொசுக் என்று கோபம் வந்துவிடுமே. திடீரென முகத்தை தூக்கி வைத்துக் கொள்வார்.
முதலை: லவ்வர் ஈவிரக்கம் இல்லாமல் நடந்துகொள்பவர். உங்களிடையே பிரச்னைகள் ஏற்படவும் அதுவே காரணம்.
சுறா மீன்: உங்கள் லவ்வர் எல்லாவற்றிலும் கேர்லஸாக இருப்பவர்.
4. பேச விரும்பும் விலங்கு..
ஆடு: நீங்களும் லவ்வரும் கண்ணால், மனதாலேயே பேசிக்கொள்ள வேண்டும் என விரும்புபவர் நீங்கள்.
குதிரை: இருவருக்கும் இடையே எந்த ரகசியமும் இருக்க கூடாது என்று நினைப்பவர் நீங்கள்.
எலி: அமைதியான வாழ்க்கை, எந்நேரமும் காதல் என சுக வாழ்க்கைக்காக காதலிப்பவர் நீங்கள்.
பறவை: ஸ்மூத்தான, நீண்ட வாழ்க்கை வாழ்வதில் ஆர்வம் உள்ளவர்.
5. தீவில் நீங்கள் தேர்வு செய்வது..
மனிதன்: லவ்வரிடம் உண்மை தவறி நடக்கமாட்டீர்கள்.
பன்றி: உங்களுக்கு ஆசை, பேராசை அதிகம்.
மாடு: பொறுமை, சகிப்புத்தன்மை உங்களுக்கு அதிகம்.
பறவை: காதல் என்றாலும் அதிலும் சுதந்திரத்தை விரும்புபவர்.
6. நீங்கள் அடக்க நினைக்கும் விலங்கு..
டைனோசர்: நெகட்டிவ் சிந்தனை கொண்டவர் நீங்கள்.
புலி: திருமண பந்தத்தின் மீதும் இல்லத்துணை, லவ்வர் மீதும் அதிக நம்பிக்கை உள்ளவர்.
பனிக்கரடி: திருமணம், சுதந்திரத்தை பறித்துவிடும் என்ற கருத்து உள்ளவர் நீங்கள்.
சிறுத்தை: திருமணம், வாழ்க்கை பற்றிய ஐடியா இல்லாவிட்டாலும், திருமணத்தின் மீது அதிக நாட்டம் உள்ளவர்.
என்ன.. உங்கள் லவ், லவ்வர் பற்றி தெரிந்துகொண்டீர்களா? ஹேப்பி வாலன்டைன்ஸ் டே!
0 கருத்து:
கருத்துரையிடுக