சில மாதங்களுக்கு முன் நெதர்லாந்து உறவுகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒரு சிறிய திட்டமான உலர் உணவுப்பொருள் உற்பத்தியில் ஒன்றான கறித்தூளை, வறுமைப்பட்ட ஊர் உறவுகளால் உற்பத்தி செய்யப்படப்பட்டு சில புலம்பெயர் நாடுகளில் வாழும் ஊர் உறவுகள் அதனை அனுப்பி எடுத்திருக்கும் தகவல்
அனைவரும் அறிந்ததே.
இத்திட்டத்தை மேம்படுத்தும் நோக்குடனும், உற்பத்தியின்
தொகையை உயர்த்திக்கொள்ளும் தேவை கருதியும், இதில்
தொழில்புரியும் வறுமைப்பட்ட ஊர் உறவுகளுக்கு ஒரு நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கும் சமூக சிந்தனையோடும், கீழ்குறிப்பிடப்பட்ட புலம்பெயர் நாடுகளில் வாழும் ஊர் உறவுகள்
இணைந்து மாதாந்தம் ஒவ்வொரு நாட்டினர்களும் 50KG உலர்உணவுப்பொருட்களை அனுப்பி எடுத்துதவுவதற்கு தாமாக முன்வந்துள்ளார்கள்.
ஊர்ச்சமூகத்தின் அக்கறைகொண்ட குடும்பங்களின் பெயர்கள் பின்வருமாறு:
மேலே குறிப்பிட்ட உறவுகளுடன் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டே பெயர்விபரங்கள்திரட்டப்பட்டதோடு, இவற்றில் ஏற்படக்கூடிய நடைமுறை சிக்கல்களை நேர்கொள்ளும் தைரியத்தோடே இவர்கள் இச்செயலில் இறங்கியிருக்கிறார்கள் என்பது பாராட்டவேண்டிய விடயம். இதில் எந்த
நாட்டு அமைப்பின் ஈடுபாடும் இருந்திருக்கவில்லை என்பது இங்கு முக்கியமாக குறிப்பிடவேண்டியதும் அவசியமே.
அனுப்பியவர் -சுதர்சன் |
0 கருத்து:
கருத்துரையிடுக