ஒரு தம்பதியின் வாய்த் தகராறு இரத்த வெள்ளத்தில் முடிந்துள்ளது. நேற்று இரவு 19h30 மணிக்கு ஒரு 40 வயதுப் பெண்மணி Bruyères-sur-Oise (Val-d'Oise) எனும் இடத்தில் கணவனால் பல கத்திக் குத்துக்களுக்கு ஆளாகிக் கொல்லப்பட்டுள்ளார்.தகராற்றின் உச்சத்தில் கத்திக் குத்துக்குள்ளான பெண்
அவ்விடத்திலேயே இறந்துள்ளார். அவசர முதலுதவிப்படையினர் வந்தபோது அது தாமதமாகியிருந்தது.
கணவன் கைது செய்யப்பட்டுக் காவலில் இடப்பட்டுள்ளார். கட்டுங்கடங்காத கோபம் மற்றவரை அழித்ததோடு அவர் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக