காதல் ஏற்பட்ட தோல்வியால் கடந்த 31 ஆம் திகதியன்று பொலன்நறுவை பலதிசி கல்வியற் கல்லூரி சிங்கள மாணவி ஒருவர் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் கட்டமொன்றிலிருந்து கீழே குதித்ததில் படுகாயமடைந்திருந்தார். இந்நிலையில் பொலன்நறுவை வைத்தியசாலையில்
இதனையறிந்து மாணவியின் காதலன் இன்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
காதலனும் பொலன்நறுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று வருடங்களாக இவர்களின் காதல் நீடித்தது எனவும், காதலனின் பெற்றோரின் எதிர்ப்பை அடுத்து அண்மையில் இக்காதல் முறிந்தது எனவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து மனவேதனையடைந்த காதலி கடந்த 31 ஆம் திகதியன்று தற்கொலை செய்யும் நோக்கத்துடன் கட்டமொன்றிலிருந்து கீழே குதித்ததில் படுகாயமடைந்திருந்தார்.
இவர்கள் இருவரினதும் மரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐயோ.. பார்த்தீங்களா... காதலால் தோல்வியால் வந்த விபரீதம்.. காதலியும் மரணம்... காதலனும் தற்கொலை
0 கருத்து:
கருத்துரையிடுக