மரண கிரியைக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வைத்துவிட்டு, ராமநாதபுரத்தில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனர். ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன்,55. சோடா வியாபாரம் செய்து வந்தவர். மனைவி ஜோதி,45. இரண்டு மகள்கள் உள்ளனர்.
இரண்டாவது மகளுக்கு, கடந்த வாரம் தான் திருமணம் முடிந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்தில், முருகேசன் கால் உடைந்தது. கால்களை சரி செய்ய, 3 லட்ச ரூபாய் செலவாகும் என்பதால், மனம் உடைந்த நிலையில் இருந்தார்.நேற்று முன்தினம் இரவு, ஈமக்கிரியைக்குரிய நெல், கலயம், சந்தனம், குங்குமம், மற்றும் பொருட்களை வாங்கி வைத்துவிட்டு, பூச்சி மருந்தை கணவனும், மனைவியும் குடித்தனர். காலையில், வீட்டுக்கு வந்த முருகேசனின் தம்பி கதவை தட்டிப் பார்த்தும் திறக்காததால், ஓட்டை பிரித்து இறங்கினார். முருகேசன் இறந்து கிடந்தார். உயிருக்கு போராடிய ஜோதியை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் இறந்தார். மேலும், எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என, கடிதம் எழுதி வைத்துள்ளனர். ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் விசாரித்து வருகிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக