அழகாக மாற 200 தடவை ஒரு பெண் ஆபரேசன் செய்து கொண்டார். சீனாவில் உள்ள நாங்ஜிங் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனைக்காக வந்திருந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்து ஆச்சரியம் அடைத்தனர்.ஏனெனில் அவரது உடலில் ஏராளமான ஆபரேசன்கள் செய்யப்பட்டிருந்தன. இதுகுறித்து அவரிடம் விசாரித்தனர். அப்போது தனது உடல் அழகுக்காக 200 தடவை பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேசன் செய்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இதனால் அவரது உடல் உறுப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவரது எலும்புகள் செல்லரித்து மிகவும் பலவீனமாக உள்ளன. மேலும் அவரது இடது மார்பில் 3 செ. மீட்டர் நீளத்துக்கு புற்றுநோய் கட்டியும் உள்ளது.இந்த ஆபரேசன்களுக்கு அவர் ரூ. 3 கோடி செலவு செய்துள்ளார். கண் இமைக்கு நேரத்தில் மட்டும் 16 தடவை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அதில் என்ன விசேஷமெனில் இத்தனை முறை ஆபரேசன் செய்தும் அவர் அழகாக மாறவில்லை.
சிறிதுகாலம் இவர் தென் கொரியாவில் தங்கி இருந்தார். அப்போதுதான் இந்த ஆபரேசன் செய்து இருக்கிறார். இவரது பெற் றோர் வசதி படைத்தவர்கள் என்பதால் இவர் கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக