ஆப்கானிஸ்தானில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததால் அங்கு 100 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் ஓடுகிறது. ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் ரெயில் ஓடாத ஒரே நாடாக ஆப்கானிஸ்தான் இருந்து வந்தது.கிழக்கு பகுதியில் ஆங்கிலேயர்களின் மிரட்டலும், வடக்கு பகுதியில் ரஷிய ராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாகவும் அங்கு ஆட்சி செய்த மன்னர் ரெயில் போக்குவரத்துக்கான நடவடிக்கையை தொடங்க வில்லை.
இதனால் அங்கு ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவில்லை. ரோடுகள் மூலம் மட்டுமே வாகன போக்குவரத்து நடைபெற்றது. இந்த நிலையில் 100 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் முதன் முறையாக அங்கு ரெயில் போக்கு வரத்து தொடங்கியுள்ளது.உஸ்பெகிஸ்தான் எல்லையில் உள்ள ஹைரதானில் இருந்து ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் உள்ள மஷார்-இ-ஷெரீப் நகருக்கு தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இது 75 கி.மீட்டர் தூரமாகும்.
இந்த தண்டவாளத்தில் விரைவில் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்குகிறது. இதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடனும் ஆச்சரியத்துடனும் பார்த்தனர். இது போன்று மேலும், 6 ரெயில் பாதைகளை அமைக்க ஆப்கானிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.இதனால் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இந்தியா, ஈரான், சீனா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தானுடனான வர்த்தகம் விரிவடைய வாய்ப்பு ஏற்படும். இதற்காக ஆப்கானிஸ்தானுக்கு உதவ அண்டை நாடுகள் முன்வந்துள்ளன.
0 கருத்து:
கருத்துரையிடுக