புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இன்று பூமியில் அதிசயப்படத்தக்க வகையில் மனிதர்களுக்கு உறுதுணையாக வேலைகளை செய்யும் ரோபோக்கள் விரைவில் விண்வெளியிலும் மனிதனுக்கு துணையாக செல்லவுள்ளன.ரோபோக்கள் விரைவில் விண்வெளியிலும் மனிதனுக்கு துணையாக
செல்லவுள்ளன. தற்போது புகைப்படங்கள் எடுப்பதற்காக விண்வெளியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்ற போதிலும் அவை மனித உருவத்தை ஒத்திருப்பதில்லை.

ஆனால் அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா விண்வெளியோடங்களில் எரிபொருட்களை மீள்நிரப்பும் நோக்கத்திற்காக முதன்முறையாக ரோபோக்களை பயன்படுத்துவதுபற்றிய பரிசோதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

அத்துடன் அவற்றின் திருத்த வேலைகளிலும் இந்த ரோபோக்களை பயன்படுத்துவது குறித்த நோக்கத்தையும் கொண்டுள்ளது. Robotic Refueling Mission (RRM) என்று பெயரிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் ரோபோக்கள் 250 கிலோகிராம் நிறையை கொண்டுள்ளதுடன் 83 x 109 x 114 cm என்ற அளவிடைக்கு அமைவாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரு தடவையில் தமக்குள் 1.7 லீட்டர் எரிபொருளை எடுத்துச்செல்லக்கூடிய இந்த ரோபோக்களின் பரிசோதனை 2013ம் ஆண்டு வரையும் தொடரும் என நாசா தெரிவித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top