புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சுப்பர் மார்க்கெட்டுக்களில் மலிவாகக் கிடைக்கும் மதுபானங்களை அருந்துபவர்கள் பலருக்கும் கல்லீரல் நோய் தாக்கி விரைவாகவே இறந்து போவதாக ஆய்வு ஒன்றில் இருந்து தெரிய வந்துள்ளது.குடிப்பழக்கம் காரணமாக கடந்த எட்டு வருடங்களில் இறப்பு வீதமானது 25 வீதத்தால்
உயர்ந்து வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலைமையால் வாராந்தம் சராசரியாக 200 பேர் இறப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.


குடிப்பழக்கத்தால் இறப்பவர்களில் பெரும்பாலானோர் இளவயதினர் என்று தெரிய வந்துள்ளது. அதுவும் குடிக்கு அடிமையாகி இறப்போரில் பத்தில் ஒருவர் 40 வயதுக்கு உட்பட்டவராவார்.


கல்லீரல் நோய் வந்து இறப்பவர்களில் 80 வீதமானோர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என பிரித்தானியப் பொது மருத்துவமனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


குடிப்பழக்கத்தை ஓரளவுக்காவது நிறுத்த மது வகைகளுக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று இந்த ஆய்வை நடத்திய ஆராச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


குடிப்பழக்கத்தால் அதிகரிக்கும் இறப்புக்களால் பிரித்தானிய சுகாதார அமைச்சு கவலையடைந்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top