புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குவைத் நகர கட்டிடப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கையர் ஒருவர் கால் தவறி
கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். குவைத் - அஹமதி நகரில் பல் கூட்டு மாடிக் கட்டிடப்பணியில் நேற்றுக் காலை ஈடுபட்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கீழே விழுந்த இவர் ஸ்தலத்தில்
பலியாகியுள்ளார். கிண்ணியா குட்டிகக்கராசசி 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய அலிபுகான் பஸீர் என்பவரே உயிரிழந்தவராவர். 

இவரது இறுதிக்கிரியைகளை குவைத்தில் மேற் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குவைத்தில் இருக்கும் இவரது உறவினர்கள் தெரிவித்தனர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top