அமெரிக்காவின் வடமேற்கு பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் ஜி எட்வர்ட்ஸ் கஸ்ட்(28). தொடக்கப்பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரியும் இவருக்கு 2 மகள்கள் இருந்தனர்.இவர் தனது 2 மகள்களை அறைக்குள் வைத்து வெளியில் கதவை பூட்டி விட்டு வெளியில் சென்றுவிட்டார். ஆனால் அறையின் ஜன்னலை பூட்டாமல் அப்படியே திறந்து வைத்து விட்டார்.
அன்று கடும் பனி கொட்டியது. தட்பவெப்ப நிலை மைனஸ் 30 டிகிரியாக இருந்தது. இதனால் சிறுமிகள் பூட்டப்பட்டிருந்த அறைக்குள் குளிர் பரவியதால், தாங்க முடியாமல் குளிரில் நடுங்கினார்கள்.இந்த நிலையில் 3 வயது சிறுமி குளிரில் உறைந்தபடி படுக்கையில் பரிதாபமாக உயிரிழந்தாள். மற்றொரு சிறுமிக்கு உடல் விரைத்தப்படி மயங்கி கிடந்தாள். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவளை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக