புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மொரட்டுவ - ரோகல்வத்த - லுனாவ பிரதேசத்தில் தனது சொந்த மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துவிட்டு தந்தை தப்பிச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று (06) காலை இடம்பெற்றதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.தந்தை 13 வயதுடைய தனது மகளை
மிகக் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அறிந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ய முற்பட்டபோதும் அவர் தப்பிச் சென்றுள்ளார்.சந்தேகநபரைத் தேடி மொரட்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top